search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம் வெடிபொருட்கள்"

    ராமேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் சிவகங்கையில் உள்ள ஆயுத குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள ஆந்தோணியார் புரத்தில் கடந்த மாதம் ஆயுதக்குவியல் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.

    இதில் போருக்கு பயன் படுத்தப்படும் வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை அடங்கும். ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்த வெடிபொருட்கள் குறித்து மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் இதன் மாதிரிகள் சென்னை வெடிபொருள் ஆய்வு மையத்துக்கு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    இதனிடையே வெடிபொருட்களை மாவட்ட நீதிபதி பாலகுமரன் ஆய்வு செய்து அதனை அழிப்பது குறித்து அறிக்கை தருமாறு சென்னை வெடிபொருள் மையத்துக்கு உத்தரவிட்டார். அந்த அறிக்கை வந்த பின்னர் தான் வெடி பொருட்களை அழிப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

    வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். ஆயுதங்களை அங்கிருந்து அகற்றாமல் போலீசார் அங்கேயே வைத்திருந்தனர்.

    சக்தி வாய்ந்த இந்த வெடிபொருட்கள் வெடித்தால் பயங்கர விளைவுகள் ஏற்படும். எனவே இதனை அகற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அதிகாரிகளும் பரிசீலித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ராமநாதபுரம் முதன்மை நீதிபதி கயல்விழி ராமேசுவரம் நீதிபதி (பொறுப்பு) பாலகுமரன், சென்னை வெடிபொருள் ஆய்வு மைய இயக்குநர் ஷேக் உசேன், ராமேசுவரம் போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ் ஆகியோர் வெடிபொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்களது முன்னிலையில் வெடிபொருட்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் சிவகங்கையில் உள்ள ஆயுத குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு வெடிபொருட்கள் அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

    குடியிருப்பு பகுதியில் இருந்து உடனே வெடிபொருட்களை அகற்றி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் இதனை உடனே செயலிழக்கவோ, அழிக்கவோ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் எடிசன் என்பவரது வீட்டுத் தோட்டத்தில் தோண்டிய போது பயங்கர வெடிபொருட்கள், தோட்டாக்கள், கண்ணிவெடிகள் என ஆயிரக்கணக்கில் கண்டெடுக்கப்பட்டது.

    இதனை மத்திய வெடி பொருட்கள் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். பெரும்பாலும் நல்ல நிலையில் உள்ள இவைகள் வெடித்திருந்தால் பயங்கர விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என வெடிபொருள் நிபுணர்கள் தெரிவித்தனர்.

    கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள், தோட்டாக்கள், குண்டுகளை ராமேசுவரம் மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் ஆய்வு செய்தார்.

    அதன் விபரங்களை கேட்டறிந்த மாஜிஸ்திரேட்டு, கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களின் எண்ணிக்கை குறித்து தெரிவிக்குமாறு கூறினார். மேலும் மறு உத்தரவு வரும் வரை வெடிபொருட்களை பாதுகாப்பாக வைக்குமாறும் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து தோட்டக்களை மட்டும் போலீசார் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு சென்றனர். மற்ற ஆபத்தான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டு உள்ளன. அங்கு 6 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் நல்ல நிலையில் உள்ளதால் ராணுவ வெடிபொருட்கள் உற்பத்தி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.

    இன்று மாலைக்குள் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களின் வகைகள் குறித்த எண்ணிக்கை மாஜிஸ்திரேட்டிடம் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. பின்னர் ஆய்வுக்கு பின் வெடிபொருட்களை செயலிழக்கவும், அழிக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

    கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை உடனே அங்கிருந்த அப்புறப்படுத்தாமல் தங்கச்சிமடம் குடியிருப்பு பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வெடிபொருட்கள் வெடித்தால் பயங்கர விளைவுகள் ஏற்படும்.

    நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ள இந்த பகுதியில் இருந்து உடனே வெடிபொருட்களை அகற்றி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் இதனை உடனே செயலிழக்கவோ, அல்லது அழிக்கவோ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×